Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! மனதில் தெளிவு வேண்டும்..! பணிச்சுமை அதிகரிக்கும்..!

கன்னி ராசி அன்பர்களே..!
இன்று அவ்வளவு சிறப்பான நாளாக இருக்காது. ஏற்ற, இறக்கங்கள் காணப்படும். இன்று உங்களுக்கு பலன்களும் கலந்தே காணப்படும். இன்று உங்களின் மனதை தெளிவாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகின்றது.

இன்று பணிகள் அதிகமாகவும் அதில் நீங்கள் மும்முரமாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இன்று அனைவரையும் அனுசரித்துப் போவதன் மூலம் உங்களின் பணிகளை வெற்றிகரமாக முடிக்கலாம். இன்று உங்களின் துணையுடன் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்படுவீர்கள், இந்தப் போக்கை தவிர்த்துவிடுவது நல்லது. இன்று பணம் வரவு, செலவு என
இரண்டும் கலந்தே காணப்படும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். இன்று பணிகள் காரணமாக சோர்வுடன் காணப்படுவீர்கள். இன்று நீங்கள் முருக வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |