Categories
கிரிக்கெட் விளையாட்டு

100 காரணம் சொல்லலாம்…. நாங்க நினைச்ச மாறி இல்ல…. புலம்பி தள்ளும் தோனி …!!

எங்களுக்கு இந்த முறை அதிஷ்டம் வரவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக வெற்றி கண்டது. 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் படுதோல்வியடைந்து பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது. சென்னை அணியின் தோல்வி ரசிகர்களை நிலைகுலைய வைத்துள்ளது. இறுதிவரை பிளே ஆப் சுற்றுக்கு சென்னை தகுதி பெறும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு சென்னை அணியின் இந்த தோல்வி பேரதிர்ச்சியை கொடுத்தது.

இந்த நிலையில் போட்டி முடிந்து தோனியிடம் இந்த தொடரில் உங்களுக்கு எந்த விஷயம் கை கொடுக்காமல் போய் விட்டது என்ற கோவிக்கு, ஒரு நூறு காரணங்கள் சொல்லலாம். டாஸ் வின் பண்ணல. அம்பத்தி ராயுடுவுக்கு காயம் ஏற்பட்டது. ஒரு நல்ல தொடக்கத்திற்கு வரலாம் என்று நினைக்கும் போதெல்லாம் அது எங்களுக்கு கை கொடுக்காமல் போய்விட்டது. முக்கியமாக கிரிக்கெட் மேட்ச்சை பொறுத்தவரை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அதிர்ஷ்டமான தருணம் வர வேண்டும். அந்த அதிஷ்டமான தருணம் இது வரைக்கும் எங்களுக்கு நடக்கவே இல்லை. இந்த மேட்சை பொறுத்தவரை நாங்கள் நினைச்ச மாதிரி, எங்க வழியில் போகல.

இந்த போட்டியில் நாங்க இரண்டாவது பேட்டிங் செய்து இருந்தால் கூட ஜெயிப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். இப்படி 100 காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். நீங்கள் கேட்கக் கூடிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்களுடைய டேலண்ட் நம்பி நீங்க விளையாடுறீங்களா ? என்றால் மொத்தமா எங்களுடைய  அணியில் 11பேர் இருக்கோம். 11 பேருமே திறமைசாலி தான். அந்தத் திறமைகளை நாங்க பயன்படுத்தி உள்ளோமா என்று கேட்டா… நாங்கள் அதை செய்யல அப்படி தான் சொல்லுவேன். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் நாங்கள் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றோம் என்று தோனி தெரிவித்தார்.

Categories

Tech |