Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் அடுத்தடுத்து மூன்று திட்டங்கள்… தொடங்கி வைத்த பிரதமர்… உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்…!!!

குஜராத்தில் வேளாண்மை துறை, சுற்றுலாத்துறை மற்றும் மருத்துவ துறைக்கான வளர்ச்சித் திட்டங்களை காணொலிக் காட்சி மூலமாக பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்சாரம் வழங்கக் கூடிய வகையில் கிசான் சூரியோதயா யோஜனா என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின்படி விவசாயிகள் அனைவருக்கும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையில் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும். 3500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தை காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக 2023 ஆம் ஆண்டுக்குள் மின் வினியோக உட்கட்டமைப்பை விரைவில் உருவாக்குவதற்கு 3,500 கோடி ரூபாய் நிதியை மாநில அரசு ஒதுக்கி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சுற்றுலாவாசிகள் பயன்படக்கூடிய வகையில் ரோப்கார் திட்டத்தை குஜராத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் 2.3 கிலோமீட்டர் மழைக் காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கலாம். ஆரம்பத்தில் ஒரு பெட்டியில் எட்டு நபர்கள் என்ற கணக்குடன் 25 முதல் 30 பெட்டிகள் இருக்கும். அதன் மூலம் 2.3 கிலோ மீட்டர் தூரத்தை ஏழு நிமிடங்களில் அடையலாம். அதன்பிறகு அகமதாபாத்தில் உள்ள ஐநாவின் மேத்தா இருதவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள குழந்தைகள் இருதய மருத்துவமனை ஒன்றை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்துள்ளார்.

Categories

Tech |