சோமாலியாவில் சிக்கி உள்ள 33 இந்தியர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 25 தொழிலாளர்கள் உள்பட 33 இந்தியர்கள் 10 மாதங்களுக்கு முன்பு சோமாலியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தனர். அவர்களை முதல் இரண்டு மாதங்கள் அந்த நிறுவனம் நன்றாக நடத்தியது. ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் மிகவும் மோசமாக நடத்தியதுடன் பழைய கைதிகளாக சிறை பிடித்து வைத்துள்ளது.
அவர்களை மீட்க இந்திய தூதரகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ள பதிவில், வெளியுறவுத்துறை அமைச்சகமும் நெய்ரோப்பியாவில் உள்ள நமது தூதரகமும் சோமாலியாவின் மொகன் டோஷோ நகரில் உள்ள நிறுவனத்தில் சிக்கி கொண்டுள்ள 31 இந்தியர்கள் தாயகம் மீட்டுக் கொண்டுவர தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதோடு நமது அதிகாரிகள் இந்தியாவில் உள்ள சோமாலிய தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகின்றனர். இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது என அந்தப் பதிவில் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.