Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கூனி மீன் கபாப்…எளிய முறையில்…அருமையான சுவையில்…!!

கூனி மீன் கபாப் செய்ய தேவையான பொருட்கள்:

இஞ்சி பூண்டு விழுது                    – 1 தேக்கரண்டி
கூனி மீன்                                           – 300 கிராம்
மிளகாய்த்தூள்                                 – 1 தேக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு                   – 1 தேக்கரண்டி
வெங்காயம்                                       – 200
உப்பு, மஞ்சள் பொடி                      – தேவையான அளவு

செய்முறை:

பாத்திரத்தில் சுத்தம் செய்த 300 கிராம் கூனி மீன், உப்பு, மஞ்சள்த்தூள், இஞ்சிப்பூண்டு விழுது, மிளகாய்த்தூள், எலுமிச்சைச்சாறு 1 தேக்கரண்டி சேர்த்து கலக்கி மீனின் இரண்டு புறமும் புரட்டிக் கொள்ளவும்.

கபாப் குச்சிகளை எடுத்து அதன் முனையை எலுமிச்சை பழச்சாறில் ஊறவைத்து, பின் விரவிய மீனின் மீது குத்தி வைக்கவும். அதனை தொடர்ந்து அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்தால் சுவையான கூனி மீன் கபாப் ரெடி.

Categories

Tech |