OBC இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அக்.26ஆம் தேதி தீர்ப்பு வழங்க இருக்கின்றது.
தமிழ்நாடு மொத்தம் எதிர்பார்க்கக்கூடிய வழக்கில்தான் அக்டோபர் 26 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று முதல் வழக்காக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு என்பது வழங்கப்பட இருக்கிறது. கிட்டத்தட்ட தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும், ஒரே ஒரு கட்சி தவிர ஒருமித்த குரலில் ஓபிசி மாணவர்களுக்கு மத்திய அரசு தொகுப்பிற்கு தமிழக அரசில் இருந்து ஒதுக்கக் கூடிய மருத்துவ இடங்களில் 50% ஓபிசி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற பிரதானமான கோரிக்கையை வைத்து வழக்கு தொடர்ந்தார்கள்.
சென்னை உயர் நீதிமன்றம் இதனை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த சொல்லி இருந்தார்கள். உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்வி எழுப்பி இருந்தார்.ஆனால் மத்திய அரசோ எந்த ஒரு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறி வந்த நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என ஏற்கனவே உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தெரிவித்திருந்தார்.
மத்திய அரசு முடியாது என்று சொல்லி விட்டார்கள்.எனவே உச்ச நீதிமன்றம் ஒரு அழுத்தம் கொடுத்து உத்தரவு பிறப்பிக்குமா ? அல்லது மத்திய அரசு சொன்ன வாதத்தை எடுத்து இந்த ஆண்டு வழங்க முடியாது என்று சொல்லி வழக்குகளை தள்ளுபடி செய்யுமா ? என பல்வேறு கேள்விகளுக்கு இந்த தீர்ப்பு மூலம் விடை கிடைத்துவிடும் எனபதால் ஒட்டுமொத்த தமிழகமும் இதனை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றது.