கிராம நிர்வாக அதிகாரி தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தியதாக கூறி இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் துவரிமான் அருகே இருக்கும் இந்திராகாலனியை சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் வீட்டின் அருகே கீழ சின்னம்பட்டி கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்யும் திலீபன் என்பவர் தங்கியிருந்தார். கடந்த 22ஆம் தேதி அன்னலட்சுமின் வீட்டிற்குள் திலீபனின் வீட்டில் உள்ள பசு சென்றுள்ளது. இதுகுறித்து அன்னலட்சுமி திலீபன்டம் கூறியுள்ளார். இதனையடுத்து திலீபன் மற்றும் அவரது குடும்பத்தினர் அன்னலட்சுமியின் வீட்டிற்கு சென்று அவரை தவறான வார்த்தைகளால் திட்டி அவமானப் படுத்தி உள்ளனர். அதோடு மானபங்கம் படுத்தவும் முயற்சித்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அன்னலட்சுமி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அன்னலட்சுமியை காப்பாற்றியதாக கூறப்படுகின்றது. அதோடு இதுபற்றி கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாக கூறி அப்பகுதியில் உள்ள மகளிர் அமைப்பினர் மற்றும் பெண்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்தனர். புகார் மனுவில் தகாத முறையில் பெண்களிடம் செயல்படும் கிராம நிர்வாக அதிகாரியை உடனடியாக பணி இடைநீக்கம் செய்தாக வேண்டும் என்றும் தனியாக இருந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி மானபங்கப்படுத்த முயற்சித்த குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.