மதுரை மாவட்டம் செங்குளம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள நிலையில் ஆளை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமங்கலம் அடுத்த முருகன்ஏறி கிராமத்தில் சண்முகராஜன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லட்சுமி மற்றும் மகாலட்சுமி ஆகியோர் சிகிச்சை பலன் தராமல் இறந்துவிட்டதால் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது. இதனிடையே பட்டாசு ஆலை உரிமையாளர் சண்முகராஜன் உள்ளிட்ட 3 பேர் மீது கல்லுப்பட்டி போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்நிலையில் இறந்த 7 பேரின் உடல் கூராய்வு செய்யப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆலை நிர்வாகம் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என்று கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இழப்பீடு தர ஆலை நிர்வாகம் ஒப்புக்கொண்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது.