பெரம்பலூரில் டைனோசர் முட்டைகள் கிடைத்ததாக பரவிய வதந்தி தொடர்ந்து நெட்டிசன்கள் பல மீம்களை தயாரித்து இணையத்தை கலக்கி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே இருக்கும் குன்னம் கிராமம் அடுத்து உள்ள வெங்கட்டான் குளத்தில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சில தினங்களுக்கு முன்பு வண்டல்மண் எடுத்தனர். அப்போது சில கடல்வாழ் உயிரினங்களின் தொல்லியல் படிவங்கள் அவர்களது கைக்கு கிடைக்கப்பெற்றது. அப்போது உருண்டை வடிவத்தில் பல தொல்லியல் பொருட்கள் கிடைத்ததால் அதனை பார்த்த மக்கள் டைனோசர் முட்டை கிடைத்ததாக வதந்திகளை பரப்ப தொடங்கினார்.
ஆனால் உண்மையில் அது டைனோசர் முட்டை இல்லை. ஒரு சிறிய பொருளை சுற்றி தாதுப்பொருட்கள் சேர்ந்தால் உருண்டையாக முட்டை வடிவில் மாறிவிடும். அதுதான் டைனோசர் முட்டை வடிவத்தில் மாறி உள்ளது என தொல்லியல் அறிஞர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது பல மீம்ஸ்கள் இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த மீம்ஸ்கள் அரியலூர் மற்றும் பெரம்பலூர் பகுதியில் டைனோசர் வாழ்வது போன்று நகைச்சுவையுடன் தயார் செய்யப்பட்டுள்ளன.