முட்டையும் காய்கறியும் செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை – 6
மிளகாய் – 8
உருளைக்கிழங்கு – கால் கிலோ
இஞ்சி – சிறிது
வெங்காயம் – 10
பூண்டு – 3 பல்
சீரகம் – 1 தேக்கரண்டி
கசகசா – 2 தேக்கரண்டி
மல்லி – 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 3 கரண்டி
பட்டாணி – 100 கிராம்
உப்பு மற்றும் மஞ்சள் தூள் – தேவையான அளவு
தேங்காய்ப்பால் – 100 மில்லி
செய்முறை:
முதலில் முட்டையை தண்ணீர் விட்டு நன்கு வேக வைத்து, தோல் உரித்து இரண்டாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து பட்டாணியையும், உருளைக்கிழங்கையும் தனி தனியாக வேக வைத்து எடுத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் உரித்து நறுக்கி வைக்கவும்.
மல்லி, சீரகம் ,வற்றல், பூண்டு என அனைத்தையும் வறுத்து, அதனுடன் கசகசா முந்திரிப்பருப்பு சேர்த்து அரைத்து வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக வெட்டிய வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டை நன்றாக வதக்கி, அதனுடன் 100 மில்லி தேங்காய் பால், அரைத்த மசாலாவையும் கரைத்து ஊற்றி உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு குழம்பை கொதிக்க விடவும்.
அதனையடுத்து வேகவைத்த பட்டாணி, மசிச்ச உருளைக்கிழங்குயும் சேர்த்து கொதிக்க விட்டு, குழம்பு வற்றியதும் தயாராக வைத்திருக்கும் முட்டையின், மேல் ஊற்றி மல்லி இலை தூவவும். இப்போது சுவையான முட்டை காய்கறி தயார்.