Categories
தேசிய செய்திகள்

இனி இதை விற்க கூடாது….. இன்று முதல் தடை போட்டாச்சு….!!

இந்தியா முழுவதிலும் இருக்கும் ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டுப் பொருட்களை விற்பதற்கு மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் ராணுவ கேண்டீன்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கும் ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் செயல்பட்டு வருகின்றது. இங்கு மளிகை பொருட்கள்,  மின்னணு பொருட்கள் உள்ளிட்ட வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றது.

இந்நிலையில் வெளிநாட்டு பொருட்களை நாடு முழுவதிலும் இருக்கும் ராணுவ கேன்டீன்களில் விற்க கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் “இனி நேரடியாக வெளிநாட்டு பொருட்களை கொள்முதல் செய்யகூடாது. நம் நாட்டு தயாரிப்புகளை விற்க  வேண்டும் என்ற பிரதமரின் முடிவுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |