Categories
லைப் ஸ்டைல்

நீண்ட விமான பயணமா? இந்த 3 விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்

வானத்தில் பறக்கும் பயணத்தை உங்களுக்கு ஏற்றவாறு அமைக்க பலர் செய்யும் இந்த தவறுகளை நீங்கள் செய்யாமல் இருக்க வேண்டும்.

நம் அனைவருக்கும் பிடித்த ஒன்று சுற்றுலா மற்றும் பயணம். துணிகளை எடுத்து வைப்பதில் இருந்து, பயணத்திற்கு தேவையான அனைத்தையும் செய்வது மிகவும் சுவாரசியமான ஒன்று ஆனால் இதில் சிலருக்கு தடையாய் இருப்பது பல மணி நேரங்கள் நாம் மேற்கொள்ளும் விமான பயணம். வானத்தில் பறக்கும் பயணத்தை உங்களுக்கு ஏற்றவாறு அமைக்க பலர் செய்யும் இந்த தவறுகளை நீங்கள் செய்யாமல் இருக்க வேண்டும்.

1. நல்ல தூக்கம்:

பலரும் செய்யும் தவறு இது தான் – பயணத்துக்கு முந்தைய நாள் சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது. அதிகாலை பயணம் மேற்கொள்ளுபவர் நிச்சயம் நன்றாக தூங்க வேண்டும். நீங்கள் தூங்காமல் பயணம் செய்தால் உங்கள் இலக்கை சென்றடையும் பொது சோர்வாக இருப்பீர்கள். அதற்கும் மேலாக உங்களது முதல் நாளை தூங்கியே கழிப்பீர்கள்.

2. விருந்து போன்று உணவு உண்பதை தவிர்க்கவும்:

உங்கள் விமானத்தில் ஏறும் முன்பு நல்ல ஃபாஸ்ட் ஃபுட்  உணவை  சுவைக்க ஆர்வமாக தான் இருக்கும்; ஆனால் அது சரியாக அமையாது. ஃபாஸ்ட் ஃபுட் உணவில் அதிகம் சோடியம் இருக்கும், அது உங்களது நீர் சத்துக்களை குறைத்து சோர்வடைய செய்யும். சில சமையம் பயணம் செய்யும் பொழுது உங்களது கால் கைகள் வீங்கும் இதற்கு காரணம் உடலில் போதிய அளவு நீர் இல்லாததே ஆகும்.

3. ஹைட்ரேட்:

பயணத்திற்கு முன்னும் பின்னும் உங்களை ஹைட்ரேட் ஆக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். மூடிய சூழலில், எ சி யில் வெகு நேரம் இருப்பதால் நீங்கள் டிஹைட்ரேட் ஆகி விடுவீர்கள். அதனால் நிச்சயம் தண்ணீரை கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.

Categories

Tech |