Categories
லைப் ஸ்டைல்

காதலில் குழப்பமா? செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள்

காதல் உறவுகளில் ஏற்படும் குழப்பங்கள், சிலநேரம் மகிழ்ச்சியை சிதைக்கக் கூடியவையாக உருவெடுக்கும்.

உறவுகளில் குழப்பம் ஏற்படுவது, ஒருவரை அமைதியற்ற மனநிலைக்கு எடுத்து செல்லும். தனி மனித வாழ்க்கையின் வளர்ச்சிக்கு, அவரது உறவுகள் பெரும் பங்காற்றுகின்றன. அதிலும் காதல் உறவுகள், ஒருவரின் மன உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்கின்றன. காதல் உறவுகளில் ஏற்படும் குழப்பங்கள், சிலநேரம் மகிழ்ச்சியை சிதைக்கக் கூடியவையாக உருவெடுக்கும்.

காதல் பாதையிலோ, காதலரிடமோ மனக்கசப்பு ஏற்பட்டால், அதற்கான பதிலை தேடி செல்வது அவசியம். மன உணர்ச்சிகளை மறைத்து கொண்டு குழப்பங்களை வளர்த்துக் கொள்வதினால் ஒரு பயனும் இல்லை. எனவே, உறவுகளில் குழப்பம் ஏற்படும் போது செய்ய வேண்டிய சில விஷயங்கள் இதோ,

நிதானத்துடன் செல்லவும்:

உறவுகளில், ஒருவருக்கொருவரான இடைவெளியை அளியுங்கள். உறவுகளின் தொடக்கமாக இருந்தாலும், சில காலம் ஒன்றாக வாழ்ந்திருந்தாலும், பிரிவு எண்ணங்களை நோக்கி உடனுக்குடன் முடிவு எடுப்பதை தவிர்த்து விடுங்கள். பிரிவு எண்ணங்களுக்கான காரணங்களை யோசித்து பாருங்கள், அவை தற்காலிகமாக தோன்றிய ஒன்றா? அல்லது நிரந்தர முடிவா என்று நினைத்து பாருங்கள். முடிவு எடுக்கும் முன் சிந்தித்து முடிவெடுங்கள்.

உங்கள் காதலன்/காதலியுடன் உரையாட முயற்சியுங்கள்:

நீங்கள் நினைப்பதை உங்கள் காதலருடன்/காதலியுடன் பகிர்ந்து கொள்ள முயலும் போது, அதைப்பற்றி கேட்டறிய அவர் தயாராக இருந்தால், தயக்கமின்றி பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களை வருந்தும் அதே எண்ணங்கள் உங்கள் காதலரையும் வருந்தச் செய்யலாம். இருவரும் பேசாது இருந்தால், அதைப்பற்றி தெரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் அமையாமலேயே போகும். எந்த நிலைமையில் இருந்தாலும், ஒதுங்கி போவதை தவிர்த்து மனம் திறந்த உரையாடலை மேற்கொண்டாலே, பிரச்சனைகளுக்கான பதில் கிடைக்கும். அதுமட்டுமின்றி, உரையாடலுக்கு பின்னர் எடுக்க வேண்டிய முடிவினை குறித்த தெளிவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

உள்ளுணர்வின் மீது நம்பிக்கை:

உங்கள் காதலரின் நடவடிக்கையினால் (முன்னாள் காதலருடன் உரையாடியது குறித்து உங்களிடம் பொய் கூறினால்) உறவிகளில் குழப்பம் ஏற்பட்டால், மிகவும் யோசித்து நேரத்தை வீணடிக்காமல், நிலைமையை எதிர்க்கொள்ள தயாராகுங்கள். உங்களுக்கு தோன்றியபடி பிரச்சனையை அணுகி, காதலரின் விளக்கத்தையும் கேட்டறிய சந்தர்ப்பம் அளியுங்கள். அதையும் மீறி, நிலைமையை மாற்ற இயலாத தருணத்தில் உங்கள் உள்ளுணர்வு கூறியபடி, நம்பிக்கையுடன் செயலாற்ற தயங்காதீர்கள்.

Categories

Tech |