Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கீறி முட்டை ரெசிபி…மிக சுவையாக…செய்வது எப்படி?

கீறி முட்டை செய்ய தேவையான பொருட்கள்:

முட்டை                                               –  6
நல்லெண்ணெய்                           –  1 கரண்டி
சீரகம்                                                  –    1
வெங்காயம்                                     –   50 கிராம்
உளுந்தம் பருப்பு                           – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் ,  உப்பு                     – தேவையான அளவு
கருவேப்பிலை                               – சிறிது

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து வத்தல், சீரகம், உளுந்தம்  பருப்பு, கருவேப்பிலை எல்லாவற்றையும் வறுத்து அரைத்து தூள் செய்து, அதனுடன் மஞ்சள்த்தூள், உப்பு சேர்த்து தனியாக எடுத்து கொள்ளவும். முட்டையை நன்கு வேக வைத்து, தோல் உரித்து  நீள வாக்கில் ஐந்து இடத்தில் கீறிக் கொள்ளவும்.

முட்டையின் கீறிய பாகத்தில் தூள்ளாக்கி வைத்த பொடியை சேர்க்கவும். அடுப்பில் கடாயை வைத்து  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கி,  அதனுடன் கீறி வைத்த முட்டைகளையும் போட்டு ஒரு புரட்டு புரட்டி எடுத்தால் கீறி முட்டை தயார்.

Categories

Tech |