புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பல வருடங்களுக்கும் மேலாக புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்கள் பட்டா வாங்க பெரும் பாடு படுகின்றனர். ஒவ்வொரு முறையும் பட்டாவிற்கு விண்ணப்பித்தாலும் கிடைக்க தாமதம் ஆவதாக பல இடங்களில் புகார்கள் எழுவதுண்டு. இந்நிலையில் அதற்கு தீர்வு அளிக்கும் விதமாக முதலமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லாத புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் முதலமைச்சர் தொடக்கி வைக்கும் பட்டா மேளாவில் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு இடம் அனைத்தும் வரன்முறை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டா பெற விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.