Categories
லைப் ஸ்டைல்

சிம்பிள் ஆன இரவு நேர ஸ்கின் டிப்ஸ்…!!

இந்த சிம்பிளான வழிமுறைகளை பின்பற்றி உங்கள் முகத்தைப் பொலிவுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

தற்போது சோர்ந்திருக்கு உங்கள் முகத்தைப் பார்த்தால் வெறுப்பாக இருக்கறது. உங்கள் முகச் சருமத்துக்குப் போதுமான நேரம் ஒதுக்கி கவனித்துக் கொள்கிறீர்களா؟  வெறுமனே சருமத்தை சுத்தப்படுத்துவதால் மட்டும் போதாது. முக்கியமாக, பெரும்பாலும் வீட்டுக்கு வெளியே அதிகம் சுற்றித் திரிபவர்களுக்கு சரும பாதிப்பு அதிகமாக இருக்கும். அப்படி இருப்பவர்பகள் சருமத்தைப் பாதுகாக்க அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும். ஆனால், பொறுமையாக சருமத்துக்குத் தேவையானவற்றை செய்ய நேரமிருப்பதில்லை. ஆனால், இரவு நேரத்தில் சருமத்தைப் பாதுகாக்க சில விஷயங்களைச் செய்தால் அது நெடு நாட்கள் உங்களைப் பொலிவுடன் வைத்திருக்கும்.

க்ளென்ஸ் செய்யுங்கள்:

மேக்கப் போட்டுக் கொண்டு இரவு நேரத்தில் தூங்கச் செல்வது உங்கள் சருமத்துக்கு மிகுந்த கேடு விளைக்கும். அப்படிச் செய்வதால் முகச் சருமம் சத்துகளை இழுக்காது. எனவே, ஒரு ஜென்டிலான க்ளென்ஸர் மூலம் முதலில் முகத்தில் இருக்கும் மேக்கப் எடுக்கப்பட வேண்டும்.

இந்த க்ளென்ஸரை இப்படிச் செய்யலாம்…

  1. மூன்று பங்கு தேங்காய் எண்ணெய்யுடனோ அல்லது நீங்கள் பயன்படுத்தும் வேறு எண்ணெய்யுடனோ ஒரு பங்கு விளக்கெண்ணெய்யைக் கலக்குங்கள்.
  2. இந்த எண்ணெய்க் கலவையை எடுத்து உங்கள் முகத்தில் மெதுவாக தேய்க்க ஆரம்பியுங்கள். எங்கு சருமம் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறதோ அங்கு அதிக நேரம் மசாஜ் செய்யவும்
  3. ஒரு மிருதுவான துணியே எடுத்து கதகதப்பான நீரில் நனைத்து முகத்தில் மெதுவாக வைக்கவும். இது சருமத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேறச் செய்யும்.
  4. தற்போது, முகத்தை தேய்க்காமல், மெதுவாகத் துடைத்துவிடவும். இது முகத்தில் இருக்கும் எண்ணெய்யை எடுத்து விடும்.

ஸ்கின் டோனர் பயன்படுத்துங்கள்:

டோனர், முகத்தை மேளும் மிருதுவாக்கி முகத்தை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கும். இயற்கையான ஒரு ஸ்கின் டோனர் வேண்டுமானால், ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம். இந்த ஸ்கின் டோனர் அனைத்து வகை சருமங்களுக்கும் ஏற்றவாறு இருக்கும். எந்தப் பக்க விளைவுகளையும் உண்டு பண்ணாது. ஒரு பஞ்சுப் பந்தை எடுத்து ரோஸ் வாட்டரில் அதை முக்கி, முகத்தில் மெதுவாக தேய்க்கவும். பின்னர், அதை கழுத்து மற்றும் மொத்த முகத்துக்கும் பரவும் வகையில் தேய்க்கவும். க்ரீன் டீயும் ஒரு இயற்கையாக கிடைக்கும் ஸ்கின் டோனர் தான். க்ரீன் டீயை மர எண்ணைய்யை சேர்த்து முகத்தில் தடவி பயன்பெறலாம்.

நைட் ஜெல் மூலம் மசாஜ்,

இரவு நேரங்களில் முகத்துக்குத் தடவுவதற்கென்றே ஜெல் மற்றும் க்ரீம்கள் கிடைக்கின்றன. ஜெல்-ஐ கொஞ்சம் எடுத்து, நெற்றியில் தேய்க்க ஆரம்பியுங்கள். பின்னர், பொறுமையாக, மூக்கு கன்னம், தாடை, கழுத்து என்று எல்லா இடத்திலேயும் தடவி மசாஜ் செய்யவும். மேல் நோக்கியவாறு இந்த ஜெல்-ஐ முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும். இது முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். முகத்தில் ஈரப்பதத்தையும் பரவச் செய்யும்.

எண்ணெய்த் தடவி முடியுங்கள்,

முகத்துக்குத் தேய்ப்பதற்கென்றே பிரத்யேகமான முக எண்ணெய் சந்தையில் கிடைக்கும். இரவு தூங்கப் போவதற்கு முன்னர் இந்த எண்ணெய்யை தடவிக் கொண்டு படுத்தால், முகச் சருமத்தில் டேமேஜ் ஆன இடங்களை ரிப்பேர் செய்துவிடும்.
இந்த சிம்பிளான வழிமுறைகளை பின்பற்றி உங்கள் முகத்தைப் பொலிவுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

Categories

Tech |