Categories
மாநில செய்திகள்

“மருத்துவ படிப்பு” 510ல் இருந்து 106….. சரிவடைந்த மாணவர் சேர்க்கை…. நீட் தேர்வு காரணமா…?

நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை குறைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நீட்தேர்வு சில வருடங்களுக்கு முன்பு தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பெல்லாம் பள்ளியில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மருத்துவ படிப்புகளில் தமிழ்வழி மாணவர்களின் சேர்க்கை குறைந்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மருத்துவ கல்வி இயக்குனரகம், “2015 ஆம் ஆண்டு தமிழ் வழியில் படித்த 510 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். ஆனால் 2018 ஆம் ஆண்டு நீட்தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழ் வழியில் பயின்ற 106 மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்” என தெரிவித்துள்ளது.

Categories

Tech |