அன்றாட வாழ்க்கை முறையில் வாட்ஸ்அப் என்ற செயலி மக்களின் தொடர்பில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருக்கின்றது. தொழில்நுட்ப ரீதியில் ஆயிரக்கணக்கான தகவல்தொடர்பு இருந்தாலும், வாட்ஸ்அப் செயலிக்கான மவுசு தனி என்று சொல்லுபடி, இதை புதிது புதிதாக பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
தொடர்ந்து பயனர்களுக்கு வழங்கக்கூடிய புதுப்புது வசதிகளையும் வாட்ஸ்அப் செயலி அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. அப்படி வழங்கப்பட்ட வாட்ஸ்அப் பிசினஸ் செயலிலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு வாட்ஸ்அப் பிசினஸ் சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் வணிகத்தில் 50 மில்லியனுக்கு அதிகமான வணிக பயனாளர்கள் உள்ளனர். இந்த பயன்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால் சிறு வணிகம் தொடர்பான சிறப்பம்சம் இதில் அடங்கியுள்ளது. மேலும் வணிக சேவைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறித்து வாட்ஸ் அப் எதுவும் தெரிவிக்கவில்லை