பீகாரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜனதா தளம் ராஷ்டிரிய வாடி கட்சியின் வேட்பாளர் பலியானார்.
பீகாரில் சட்டசபைக்கான தேர்தல் வரும் 28ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சியோகர் மாவட்டத்தின் அட்சார் கிராமத்தில் ஜனதா தள ராஷ்டிரிய வாடி கட்சியின் வேட்பாளர் திரு நாராயன் சிங் மர்ம நபர்களால் நேற்று இரவு துப்பாக்கியால் சுடப்பட்டார்.
இதனால் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி திரு நாராயண் சிங் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களும் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜனதா தளம் ராஷ்ட்ரீய பாடி கட்சியின் வேட்பாளர் பலியான சம்பவம் பீஹார் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.