ஜாகீர் நாயக்கிற்கு எதிரான நடவடிக்கையை சர்வதேச போலீஸ் கையில் எடுத்துள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேசிய புலனாய்வு பிரிவு மத போதகர் ஜாகீர் நாயக் மீது பயங்கரவாதம் உட்பட பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. தன்னுடைய கைது நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காக மத போதகர் ஜாகீர் நாயக் வெளிநாடுகளில் இருந்து வருகின்றார். இதையடுத்து மத போதகர் ஜாகீர் நாயக்_கை இந்தியா கொண்டுவர அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் எந்த நீதிமன்றத்திலும் ஜாகீர் நாயக் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று 2017_ஆம் ஆண்டில் இன்டர்போல் நிராகரிதது.
இந்நிலையில் , கடந்த 2018_ஆம் ஆண்டு ஜாகீர் நாயக்_கின் பயங்கரவாத செயல்களுக்க்கான குற்றச்சாட்டுக்கு விசாரிக்க வேண்டிய காரணத்தால் அவரை நாடு கடத்த வேண்டுமென்று இந்திய அரசு மலேசிய அரசுக்கு வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் மதபோதகர் ஜாகீர் நாயக்கிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்க சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் முன்வந்துள்ளது. இதனால் கடந்த 2017-ஆம் ஆண்டில் மதபோதகர் ஜாகீர் நாயக்கிற்கு இந்திய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை சுட்டிக்காட்டி இந்திய தேசிய புலனாய்வு பிரிவு இன்டர்போலிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளது. இதை இன்டர்போல் ஏற்றுக்கொண்டதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.