Categories
தேசிய செய்திகள்

10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் – ராஷ்ட்ரிய ஜனதா தளம்

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரக் களம் சூடு பிடித்துள்ளது. பாஜக சார்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து தற்போது பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதனை அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்ஸ்ரீ யாதவு வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பீகார் மாநில மக்களுக்கு 10 லட்சம் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

Categories

Tech |