ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
முனியப்பன் பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபுவும் அவரது தம்பியான பாபுவும், அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் ஆட்டு வியாபாரியான செல்வராஜ் பத்தாயிரம் ரூபாய் கடனாக கேட்ட நிலையில் இருபது 500 ரூபாய் நோட்டுகளை சகோதரர்கள் வழங்கியுள்ளனர். அவர்கள் வழங்கிய 500 ரூபாய் நோட்டுகளும் கள்ளநோட்டுகள் என தெரிய வந்ததையடுத்து, செல்வராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பிரபு பாபுவிற்கு கள்ளநோட்டுகளை சப்ளை செய்த கேரளாவை சேர்ந்த இறைச்சி வியாபாரியான டிஜோ குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.