சென்னையில் வங்கியில் பேசுவது போன்று ஏமாற்றி மோசடி செய்த பணத்தை போலீசார் சில மணி நேரத்தில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தர்.
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ராமதுரை என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி கிரெடிட் கார்ட் விவரங்களை கேட்டுள்ளார். கிரெடிட் மூலம் கடன் பெறுவதற்கான வரம்பு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். இந்த ஆசை வார்த்தையை நாம்பி ராமதுரை OTB எண்ணை பகிர அவரது கணக்கில் இருந்து 24 ஆயிரம் ரூபாயை மர்மநபர் பறித்து கொண்டார்.
இதுகுறித்து ராமதுரை சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சைபர் கிரைம் குற்ற பிரிவு அதிகாரிகள் பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு சில மணி நேரத்தில் பணத்தை மீட்டு ராமதுரையிடம் ஒப்படைத்தனர்.