நெல்லின் ஈரப்பதம் குறித்த அறிக்கை வரும் 27ஆம் தேதி மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் என டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவாடிப்பட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் இரண்டாவது நாளாக ஆய்வு செய்தனர். நெல்லின் ஈரப்பதத்தை 17.5 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நெல் மாதிரிகளை சேகரித்து விவசாயிகளிடம் விவரங்களை சேகரித்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய குழு அதிகாரிகள் நெல் மாதிரிகள் சென்னை மண்டல இந்திய உணவு கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டு அதன் அறிக்கை வரும் 27ஆம் தேதி மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.