ட்ரம்ஸ் வாசிக்கும் 5 வயது சிறுமியின் காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி நெட்டிசன்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது
சமூக வளைதளத்தில் ஏராளமான காணொளிகள் பரவி மக்களை ஆச்சரியமூட்டுவதும் மகிழ்ச்சிப்படுத்துவதுமே வாடிக்கையாக உள்ளது. அதிலும் குழந்தைகளின் காணொளிகள் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே வைரல் ஆகி விடும். அவ்வகையில் தற்போது காணொளி ஒன்று வெளியாகி நெட்டிசன்களை ஆச்சர்யப்பட செய்துள்ளது.
காணொளியில் 5 வயது சிறுமி குச்சியை வைத்து ட்ரம்ஸ் வாசிக்கிறார். வீடியோவின் காணொளியின் பின்னணியில் பாடல் ஒன்று ஒலித்துக் கொண்டிருக்க அதில் ட்ரம்ஸ் பாகத்தை சிறுமி கட்சிதமாக வாசிக்கிறார். வாசிக்கும் போது சிறுமி குச்சியில் செய்யும் வித்தைகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்த காணொளியை பார்த்த பேஸ்கட் பால் வீரர் ஷாப்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஐந்து வயது…. உண்மை கிடையாது என பதிவிட்டுள்ளார். காணொளியை பார்த்த பலரும் தங்கள் ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/i/status/1320117107212902400