விஜயதசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர் பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதால் சலுகை விற்பனையில் ஆன்லைன் வணிகம் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக பிளிப்கார்ட் நிறுவனம் விழாக்கால சிறப்பு ஆப்பர்களை, அதுவும் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு விற்பனையை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிளிப்கார்ட் நிறுவனம் ”பிக் தீபாவளி சேல்” என்ற சிறப்பு விற்பனை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனை அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கி நவம்பர் 4 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் பல்வேறு பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.