Categories
தேசிய செய்திகள்

முடி வெட்டவில்லை எனில் வழக்கு…! ஆந்திராவில் உலாவரும் தொலைபேசி அழைப்பு…!

இளைஞர்களை தொடர்பு கொண்டு தங்களின் தலை முடிகளை வெட்டி கொள்ளவில்லை என்றால் சைபர் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் பீமுனிகம்மம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்குமார். இவருக்கு, தொலைபேசி மூலம் நேற்று (அக்டோபர் 24) ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒருவர், தான் ஒரு வட்ட ஆய்வாளர் என்றும் உனது தலை முடியை வெட்ட வில்லை எனில் சைபர் குற்ற சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் எச்சரித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணிக்குமார், தன்னுடைய முடியை வெட்டிக் கொண்டார். அந்தப் புகைப்படத்தை வாட்ஸ்அப்பிலும் வெளியிட்டுள்ளார். இதற்குப் பிறகும் அந்த அடைாளம் தெரியாத நபரிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது. அப்போது, மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என மிரட்டியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த மாணிக்குமார், அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உண்மையாகவே அப்படி ஒரு வட்ட ஆய்வாளர் இருக்கிறாரா என விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், அந்த நபரின் பெயர் மச்சிகுரி பண்டாரி எனவும் 25 வயதான அவர், சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. வழக்கமாகவே இதுபோன்று அழைப்பு விடுத்து பலரை மிரட்டியது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பண்டாரி உள்நோக்கத்துடன் செய்தாரா அல்லது அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |