Categories
லைப் ஸ்டைல்

மாத இறுதியில் பர்ஸ் காலியா? இதைப் படிங்க!

கையில் இருக்கும் பணத்தை சரியான முறையில் நிர்வாகிப்பதே சீரான வாழ்வுக்கு முக்கியமானது. சரியான அளவு சேமிப்பு வைத்திருப்பதும் பிற்காலத்தில் பெரும் உதவியக இருக்கும்.

கையில் இருக்கும் பணத்தை சரியான முறையில் நிர்வாகிப்பதே சீரான வாழ்வுக்கு முக்கியமானது. சரியான அளவு சேமிப்பு வைத்திருப்பதும் பிற்காலத்தில் பெரும் உதவியக இருக்கும். திட்டமிட்டு பண நிர்வாகம் செய்யத் தவறினால், மாத இறுதியில் சிரமத்திற்கு உள்ளாவோம். கடினமான சூழலை தவிர்க்க, முன்னெச்சரிக்கையாக இருப்பதே சிறப்பு.

நண்பர்களை போன்று செலவு செய்யாதீர்கள்:

உங்களைவிடவும் அதிகம் செலவு செய்யும் நண்பர் கூட்டம் சுற்றி இருந்தால், அளவுக்கு அதிகமாக செலவு செய்ய கட்டாயம் ஏற்படும். உங்களுக்கான செலவு வரையறை வைத்துக்கொள்ளுங்கள். விலையுயர்ந்த ஆடைகள், ஸ்டார் ஹோட்டலில் உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க முயலுங்கள்.

கஃபே காபிக்கு ‘நோ’ சொல்லுங்கள்:

ஒரு கப் காபி தான் என வாரம் இரண்டு அல்லது மூன்று முறை அந்த விருப்பமான கஃபே செல்வது வழக்கமாக கொண்டால், மாத இறுதியில் கஃபே கணக்கு மட்டும் மாதத்திற்கு 2000 முதல் 3000 ரூபாய் வரை செலவு செய்திருப்போம். எனவே, ஆசைக்கு அடிமையாகமல், சோம்பேறிதனத்திற்கு துணை போகாமல், வீட்டிலேயே காபி போட்டு குடித்தால், அவசரத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் அளவு, பணத்தை சேமிக்கலாம்.

க்ரெடிட் கார்ட் உபயோகிக்காதீர்கள்:

க்ரெடிட் கார்டுகளில் உபயோகிக்கும் போது, மாத இறுதியல் பணத்தை கொடுத்துவிடலாம் என்ற ஒரு குருட்டு நம்பிக்கையிலேயே செலவு செய்கிறோம். இது எவ்வளவு ஆபத்து என்றால், க்ரெடிட் கார்டு கொடுத்து வாங்கும் போது, பொருள் சற்று விலை அதிமாக இருந்தாலும், வாங்கிட எண்ணுவோம். பின்னர், அதை திருப்பி செலுத்தும் போது நமக்கான வேறு செலவுகள் வரிசையில் நின்று பயமுறுத்தும். க்ரெடிட் கார்டை காட்டிலும் டெபிட் கார்டு உபயோகிப்பது பாதுகாப்பாகும், எனெனில், பண வரவுக்கு ஏற்ப பார்த்து செலவிட வழிவகுக்கும்.

Categories

Tech |