திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் மூலம் முதல்வரை விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6, 7 மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகளிடையே போட்டி, மோதல் முற்றி கொண்டிருக்கின்றது. கடந்த சில நாட்களாகவே திமுக தலைவர் மு.க ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது . குறிப்பாக பல மாவட்டங்களில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள் திமுக தொண்டர்கள் கிழித்ததோடு மட்டுமில்லாமல் கண்டித்து போராட்டமும் நடத்தி வந்தனர்.
அந்த வகையில் சமீபத்தில் கோவை மாவட்டத்திலும் அதே மாதிரியான போஸ்டர் ஒட்டப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதை, திமுக இளைஞரணி சார்பாக கிழிக்கப்பட்ட நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்
அதில், கழகத்தை அவதூறுசெய்யும் நோக்கில் அடிமைகள் ஒட்டிய சுவரொட்டிகளை கிழித்தெறிந்த கோவை இளைஞரணியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மோடி காலை பிடிப்பவர் எடப்பாடி. அவரின் காலை தொழுபவர் வேலுமணி. அவர் சொல்வதை கேட்டு கரைவேட்டி கட்டாத அதிமுகவாக செயல்படும் கோவை காவல்துறையை கண்டிக்கிறோம்.
கழகத்தை அவதூறுசெய்யும் நோக்கில் அடிமைகள் ஒட்டிய சுவரொட்டிகளை கிழித்தெறிந்த கோவை இளைஞரணியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மோடி காலை பிடிப்பவர் எடப்பாடி. அவரின் காலை தொழுபவர் வேலுமணி. அவர் சொல்வதை கேட்டு கரைவேட்டி கட்டாத அதிமுகவாக செயல்படும் கோவை காவல்துறையை கண்டிக்கிறோம்.
— Udhay (@Udhaystalin) October 25, 2020