பில்லி சூனியம் எடுப்பதாக கூறி 2 லட்சம் ரூபாயும் இரண்டு கொழியும் வாங்கி மோசடி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தென்காசியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சொந்தமாக லோடு வண்டி ஓட்டி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமார் சாமியார் ஒருவரை சாலையில் வைத்து சந்தித்துள்ளார். அவரை பார்த்ததும் தனது குடும்பத்தையும் குடும்பத்தில் அடிக்கடி அனைவரும் உடல் நலக்கோளாறு பாதிக்கப்படுவதையும் கூறி அதற்கு ஒரு தீர்வு கேட்டுள்ளார். இதனை கேட்ட சாமியார் ராஜ்குமாரிடம் உங்கள் குடும்பத்திற்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது உடனடியாக அதனை எடுக்க வேண்டும் என்று கூறி பூஜைக்கு 2 சேவல் கோழி மற்றும் இரண்டு லட்ச ரூபாயுடன் சென்னைக்கு வர அறிவுறுத்தியுள்ளார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை விட்டு விட்டு சாமியார் கூறியதைக் கேட்டு ராஜ்குமார் தனது வண்டியை விற்றுவிட்டு உறவினர் ஒருவருடன் சென்னைக்கு காரில் புறப்பட்டார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகில் வைத்து ராஜ்குமார் அந்த சாமியாரிடம் இரண்டு கோழிகளையும் இரண்டு லட்சம் ரூபாயும் கொடுத்தார். அதனை வாங்கிய சாமியார் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதாக கூறி அவர்களிடம் இருந்து சென்றார்.
ஆனால் வெகு நேரமாகியும் சாமியார் வரவில்லை அப்போதுதான் ராஜ்குமார் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு போலி சாமியார் இருந்த இடத்தைக் கண்டு பிடித்தனர். அதன் பின்னர் சாமியார் யுவராஜ், அவரது காதலி ஜெயந்தி, அரக்கோணம் சுரேஷ், காசிமேடு பாப்பா, மதுரை அமர்நாத் ஆகியோரை காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும் தப்பிச் சென்ற போலி சாமியார் யுவராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.