Categories
தேசிய செய்திகள்

வேறு ஊரில் இருந்த கணவன்…. தூக்கில் தொங்கிய நர்ஸ்… கடிதத்தில் இருந்த பெயர்கள் …!!

பெண் செவிலியர் சக பணியாளர்கள் கொடுத்த துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தைச் சேர்ந்த மேகா என்ற பெண் அதே பகுதியில் இருந்த சிவில் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். கணவர் வெளியூரில் பணிபுரிவதால் தனது தாயாருடன் மேகா தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேகா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சடலத்தை மீட்டபோது மெகா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது.

அதில் மருத்துவமனையில் இருக்கும் தலைமை செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் தன்னை துன்புறுத்துவதாகவும் அதனால்தான் இந்த முடிவை எடுப்பதாகவும் எழுதியிருந்தார். மேலும் தன்னை துன்புறுத்துபவர்களின் பெயரையும் மேகா குறிப்பிட்டிருந்தார். காவல்துறையினர் தரப்பில் கூறுகையில் “மேகா கைப்பட எழுதிய கடிதத்தின் அடிப்படையில் இரண்டு தலைமை செவிலியர்கள் மற்றும் ஒரு மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். சட்டத்திலிருந்து குற்றவாளிகள் யாரும் தப்பிவிட முடியாது என கூறியுள்ளனர்.

Categories

Tech |