ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இப்போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி அரை சதமடித்து அசத்தினார். அதேசமயம் இப்போட்டியில் விராட் கோலி சிக்சர் விளாசியதன் மூலம், ஐபிஎல் தொடரில் தனது 200 ஆவது சிக்கரை அடித்து அசத்தினார்.
மேலும் ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இப்பட்டியலில் 216 சிக்சர்களுடன் எம்.எஸ்.தோனி முதலிடத்திலும், 206 சிக்சர்களுடன் ரோஹித் சர்மா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
மேலும் ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்களை விளாசியர்வகள் பட்டியலில் ‘யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெய்ல் 336 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
Another day at office and another milestone unlocked for @imVkohli.
He is the 5th player in IPL and third Indian to achieve this feat.#Dream11IPL pic.twitter.com/bXqq2lAGsz
— IndianPremierLeague (@IPL) October 25, 2020