Categories
உலக செய்திகள்

“சீனாவுடனான எல்லை பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா விரும்புகிறது”

சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா விரும்புகிறது என தெரிவித்துள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய எல்லையில் ஒரு அங்குல  இடத்தை  கூட இழக்க மாட்டோம் என உறுதி அளித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் உள்ள சுகுணா போர் நினைவிடத்தில் நடைபெற்ற சாஸ்திர பூஜையில் ராணுவ தளவாடங்கலுக்கு பூஜை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். ராணுவத்தினர் பயன்படுத்தும் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் இராணுவத்தளபதி முகுந்து நரவனே கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிழக்கு லடாக் பகுதியில் சீனாவுடனான எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதுடன் அமைதியை ஏற்படுத்தவே இந்தியா விரும்புகிறது என கூறினார். அதே நேரத்தில் இந்திய எல்லையில் ஒரு அங்குல இடத்தைக்கூட சீன ஆக்கிரமிப்பதை நமது ராணுவ வீரர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இந்தியா தனது கொள்கையில் உறுதியுடன் இருப்பதாகவும், சீனா தொடர்ந்து அத்துமீறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார்.

Categories

Tech |