Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மனைவியை கொல்ல முயன்ற கொடூர கணவன் – என்ன காரணம்…?

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மனைவியை  கணவரே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் மஞ்சுரேகா தம்பதிக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. பிரிந்துசென்ற மஞ்சுரேகா வளத்தூர் பகுதியில் தனது தாய் வீட்டில் தங்கி மாதனுர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

பிரிந்து வாழ்ந்தாலும் தொடர்ந்து வந்தார் தினேஷ். மாதனூர்க்கு சென்று மஞ்சுரேகாவை சந்தித்து அடிக்கடி தகராறு செய்துள்ளார் தினேஷ். இந்நிலையில் மனைவி பணிபுரியும் தனியார் நிறுவனத்திற்கு சென்று வம்பு இழுத்ததால் இருவருக்குமிடையேயான தகராறு கைகலப்பில் முடிந்தது. ஆத்திரமடைந்த தினேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மஞ்சுரேகாவின் கழுத்து மற்றும் கைகளில் தாக்கினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார் மஞ்சு ரேகா. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மாதனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஞ்சு ரேகா உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வேலூர் பாகாயம் காவல் நிலையத்தில் சரணடைந்தார் தினேஷ். கணவன் பிரிந்து வாழ்ந்தாலும், கல்லானாலும் கணவன் என பாவித்து ஆரம்பத்திலேயே புகார் கொடுக்க தவறியதால் தற்போது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் மஞ்சு ரேகா.

Categories

Tech |