Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

இது சும்மா ட்ரைலர் தான் மா…. சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்…. ட்விட்டரில் ட்ரெண்டிங் …!!

அமேசான் பிரைமில் சூர்யாவின் சூரரைப்போற்று போற்று படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரைப்போற்று. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே அமேசான் ப்ரைமில் இந்தப்படம் வெளியாகும் என்று நடிகர் சூர்யா அறிவித்திருந்தார். ஏர் டெக்கான் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை வைத்து எடுக்கப்பட்ட விமான கதையம்சம் கொண்ட படம் என்பதால் விமானப்படையில் இருந்து தடையில்லா சான்றிதழ் வழங்க கால தாமதம் ஆகியதை தொடர்ந்து படத்தின் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று காலை 10 மணிக்கு சூரரைப்போற்று படத்தின் டிரைலர் வெளியாகியது. அமேசான் ப்ரைம்மில் வெளியாகிய டிரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. அதுமட்டுமல்லாமல் விமானப்படையில் இருந்து தடையில்லா சான்றிதழ் தற்போது கிடைத்துள்ளதால் வருகின்ற நவம்பர் 12ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ட்ரெய்லர் வெளியாகிய மகிழ்ச்சியோடு படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டதால் சூர்யா ரசிகர்கள் டபுள் ட்ரீட் ஆக கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |