திண்டுக்கல் மாவட்டத்தில் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
வத்தலகுண்டு பேருந்து நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வரும் ஜெயக்குமாரின் கடையில் கடந்த மாதம் இளைஞர் ஒருவர் செல்போன் வாங்குவது போல நடித்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். செல்போனை பறித்து சென்று இளைஞரை சிசிடிவி காட்சிகளை வைத்து வத்தலகுண்டு காவல்துறையினர் தேடி வந்தனர். நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமான நபரை பிடித்து விசாரித்த போது செல்போன் பரிப்பில் தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர்.
விசாரணையில் கொக்கிரகுளம் பகுதியைச்சேர்ந்த கல்லூரியில் பொறியியல் மூன்றாமாண்டு படிக்கும் அய்யனார் என்பது தெரியவந்தது. அதைப்போல காளியம்மன் கோவில் தெருவில் உள்ள கோழி கடையில் லேப்டாப் திருடிய ராஜா என்ற நபரையும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்தனர்.