சேலம் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தால் கணவரை கொலை செய்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. கடந்த எட்டாம் தேதி அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். குடும்ப பிரச்சனை காரணமாக ரவி தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி உதயா தெரிவித்திருந்தார். எனினும் போலீசாரின் விசாரணையில் ரவியின் மனைவி உதயாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரிடமும் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். கள்ளத்தொடர்பை அறிந்த ரவி மனைவியை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த உதயா சதீஷ் மூலம் திட்டமிட்டு ரவியை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதை அடுத்து உதயா மற்றும் சதீஷ்சை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.