Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சைனீஸ் ஸ்டைலில்…நூடில்ஸ் ரெசிபி…!!

சைனீஸ் நூடில்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:

அவித்து வடிகட்டிய நூடில்ஸ்                                              – 8 அவுன்ஸ்
காரட் வெட்டியது                                                                       – ஒரு கப்
சோயா பீன்ஸ்                                                                             – ஒரு தேக்கரண்டி
சமைத்து சிறு துண்டுகளாக வெட்டிய கோழி          – ஒன்னரை கப்
அவித்த கோழி அல்லது கேப்ஸிகம் பச்சை பீன்ஸ் – ஒரு கப்
கார்ன் பிளவர் அல்லது மைதா                                          –  2 தேக்கரண்டி
கோஸ் நீளமாக வெட்டியது, பெல்லாரி                         – நிளமாக வெட்டியது                                            உப்பு, மிளகுத்தூள்                                                                    – தேவையான அளவு

செய்முறை:

அவித்து வடிகட்டிய நூடுல்ஸ் உடன் சிறிது வெண்ணெய் சேர்க்கவும். ஒரு கையளவு நூடில்ஸை எண்ணெயில் ப்ரவுன் செய்து அலங்கரிக்கத் தனியே எடுத்து வைக்கவும்.

கடாயில் இரண்டு கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி நீளமாக தீக்குச்சி போன்ற வெட்டி வைத்திருக்கும் காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும்.

சிறு தீயில் தன் தண்ணீரிலேயே வெந்து விடும். அதனுடன் உப்பு, மிளகுத்தூள், உரித்த கோழித்துண்டுகள் சேர்த்து ஸ்டாக்கில் கார்ன்பிளவர் கலந்து காய்கறிகளுடன் சேர்த்து, நூடில்சையும் போட்டு கொதி வந்தவுடன் இறக்கவும். சோயா பீன்ஸ் ஊற்றி பரிமாறவும்.

Categories

Tech |