கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்ணிற்கு தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நாகர்கோயில் அடுத்துள்ள மழை கட்டிப்போட்டல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். காய்ச்சலால் அவதிப்பட்ட தனது மனைவி ரெஜிலாவை தெங்கம்புதூர் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ரெஜிலாவுக்கு முகம் வீங்கியதோடு காதில் ரத்தமும் வடிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ் ரெஜினாவை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
ரெஜினாவை பரிசோதித்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையால் அவரின் ஒரு கண் பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். அந்த கண்ணை அகற்றவில்லை என்றால் மற்றொரு கண்ணும் பாதிப்படையும் என்று கூறியுள்ளனர். தவறான சிகிச்சையால் அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தவறான சிகிச்சை அளித்த ரதீஷ் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டபோது அவர் போலி எம்பிபிஎஸ் மருத்துவர் என தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவான ரதிசை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.