Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயம்ரவி, சிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நிதிஅகர்வால்….!!

நிதி அகர்வாலுக்கு தமிழ் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் அழ்ந்துள்ளனர்.

தெலுங்கில் பிரபலம் பெற்று வந்த நிதி அகர்வால், தற்போது தமிழ் சினிமாவிலும்  அடி எடுத்துள்ளார். அவர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள ‘பூமி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனை அடுத்து   சுசீந்திரன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதனால் நிதி அகர்வாலுக்கு தற்போது தமிழ் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில்  தமிழ் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி உள்ளார், அதனை மகிழ்திருமேனி இயக்குகிறார்.அதில்  கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலினும், கதாநாயகியாக  நிதி அகர்வாலும் நடிக்க உள்ளார். அதில் ஏற்கனவே அனு இமானுவேல் நடிக்க இருந்தார், ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக படத்தை விட்டு விலகி விட்டார், அதனால் நிதி அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

 

 

Categories

Tech |