சேலத்தில் பெண்ணை காதலித்து ஏமாற்றிய திமுக பிரமுகரின் மகனை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மறவுநெறி பிள்ளையார் நகர் பகுதியைச் சேர்ந்த இந்துப்பிரியா என்பவர் அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணியாற்றி வந்தார். செடிஞ்சவடி காட்டுவளவ பகுதியைச் சேர்ந்த திமுக ஊராட்சி துணை செயலாளரான ராஜ் என்பவரின் மகன் கலைச்செல்வன் அவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்வனுக்கு வேறு இடத்தில் திருமணம் பேசி முடிக்கப்பட்டது.
அதிர்ச்சி அடைந்த இந்துப்பிரியா இதுகுறித்து அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றார். நீண்ட நேரமாகியும் காவலர்கள் புகாரை பெறாததால் இந்தபிரியா காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து புகாரை பதிவு செய்த போலீசார் கலைச்செல்வனை கைது செய்தனர்.