Categories
ஆன்மிகம் கோவில்கள் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ராஜராஜசோழனுக்கு சதயவிழா” முதன்முதலாக தமிழில் வழிபாடு… மரியாதை செலுத்திய ஆட்சியர்…!!!

தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழாவில் கலெக்டர் கோவிந்தராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா கோலகமாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருக்கிறது. தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா இன்று நடைபெறுகிறது. இந்த சதயவிழாவையொட்டி கலெக்டர் கோவிந்தராவ் மாமன்னரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் தேவாரம், திருமுறை பாடி பெருவுடையாருக்கு வழிபாடு நடந்ததுமேலும் பெருவுடையாருக்கு 48 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. அதுமட்டுமன்றி மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவில் தமிழில் வழிபாடு நடத்தப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

Categories

Tech |