Categories
Uncategorized தேசிய செய்திகள்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிதிஷ்குமார் சிறையில் அடைக்கப்படுவார்…!!

பிஹார் தேர்தலில் தங்களின் லோக் ஜன சக்தி கட்சி ஆட்சிக்கு வந்தால் முதலமைச்சர் திரு  நிதிஷ்குமார் சிறையில் அடைக்கப்படுவார் என திரு சிராகபாஸ்வான் தெரிவித்துள்ளார்.

பீகார் சட்ட மன்ற தேர்தல் வரும் 28 முதல் நவம்பர் 7 வரை நடைபெற உள்ளது. தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் பிரதான எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அணி மீண்டும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளனர். திரு நிதிஷ்குமார் செல்வாக்கு சரிந்து இருப்பதாகவும். அதே நேரத்தில் பாஜக உடன் கூட்டணி அமைத்து இருப்பதால் அவருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் புக்சார் இல் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் திரு சிராக்பாஸ்வான  பீகார் தேர்தலில் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தற்போதைய முதலமைச்சர் திரு  நிதிஷ்குமார் சிறையில் அடைக்கப்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.

கள்ளத்தனமாக விற்கப்படும் மதுபானங்கள் மூலம்  திரு நிதிஷ்குமாருக்கு நல்ல வருவாய் லஞ்சமாக கிடைப்பதாக தெரிவித் துள்ளார். பீகார் முதன்மை மாநிலமாக வரவேண்டுமெனில் லோக் ஜனசக்தி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு திரு சிராக் பாஸ்வான்  கேட்டுக்கொண்டார்.

Categories

Tech |