Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சொத்து தகராறு” சித்தப்பாவை கொன்ற மகன்… விஜயமங்கலத்தில் பரபரப்பு…!!!

விஜயமங்கலத்தில் சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டதால் சித்தப்பாவை மகனே அடித்து கொன்றது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அடுத்த காட்டுத்தோட்டத்தை சேர்ந்த மூர்த்திக்கு (வயது 62) சுப்பிரமணி, மாரப்பன் என இரண்டு அண்ணன்களும் கருப்பசாமி என்ற தம்பியும் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக கொங்கன்பாளையதில் 6 ஏக்கர் நிலம்  உள்ளது. இதை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாகப்பிரிவினை செய்து கிரையம் செய்துள்ளனர். ஆனால் மாரப்பனின் மகன் தினேஷ் மட்டும் சொத்து பிரிப்பதில் தங்களை சித்தப்பா மூர்த்தி ஏமாற்றி விட்டார் என்று கூறி வந்ததால் மூர்த்திக்கும், தினேசுக்கும் இடையே முன்னதாகவே தகராறு ஏற்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு தினேஷ் கொங்கம்பாளையத்தில் உள்ள மூர்த்தியின் தோட்டத்து வீட்டுக்கு சென்று சொத்து பிரித்தது தொடர்பாக பேசினார்.

அப்போது மூர்த்தி, தினேசுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த மூர்த்தி அரிவாளால் தினேஷின் இடது கையில் வெட்டினார். அப்போது  தினேஷ் மூர்த்தியை தள்ளி விட்டதால் அருகில் இருந்த மாட்டு வண்டியின் மீது மூர்த்தி விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கையில் காயம் அடைந்த தினேஷ் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |