பீகாரில் முதற்கட்டமாக தேர்தல் நடைபெறும் 71 சட்டமன்ற தொகுதிகளுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.
243 இடங்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக நாளை மறுநாள் 71 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் 3-ம் தேதி 94 தொகுதிகளுக்கும். நவம்பர் 7-ஆம் தேதி 78 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி பிராந்திய ஜனதா தளம் காங்கிரஸ் இடது சாரிக் கட்சிகள் அடங்கிய மகாபந்தன் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராஜ் வஸ்வான் நிதிஷ்குமாருக்கு எதிராக பிரசாரம் செய்து வருவது பாஜக கூட்டணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட தேர்தல் நாளை மறுநால் நடைபெற உள்ள நிலையில் 71 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.