பெண்கள் குறித்து தவறாக பேசிய விவகாரத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது என பாஜக மாநில தலைவர் திரு. எல். முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய திருமாவளவனுக்கு ஆதரவாக முக ஸ்டாலின் பேசி இருப்பதால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறினார். திருமாவளவன் முக ஸ்டாலின் ஆகியோர் வெளியே நடமாட முடியாது என்றும் தெரிவித்தார்.