Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மீன் சாப்ஸ்…மிக சுவையாக…செய்வது எப்படி?

சாப்ஸ் மீன் செய்ய தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய்    – 500 மில்லி
கடுகு, சீரகம்             – 2 ஸ்பூன்
உப்பு                              – தேவைக்கேற்ப
மீன் துண்டுகள்        – 6 எண்ணம்
மிளகு தூள்                  – 2 டீஸ்பூன்
சோயா சாஸ்             – சிறிதளவு

செய்முறை:

முள் அதிகம் இல்லாத மீன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு வதக்கவும்.

அதனுடன் சுத்தம் செய்த மீன் துண்டுகள், உப்பு, மிளகுத்தூள், சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி குறைந்த தீயில் வேகவைக்கவும்.

மீன் வெந்ததும் அதில் சோயா சாஸ் சேர்த்து மீனை மெதுவாக பரப்பி எடுத்து இறக்கி மூடி வைத்து ஆறியதும் உண்ணலாம். இப்போது சாப்ஸ் மீன் ரெசிபி தயார்.

Categories

Tech |