சிறுமிக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி துர்கா பூஜையில் பல முன்னிலையில் கடுமையாக தாக்கும் காணொளி வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நாடோ என்ற கிராமத்தில் வைத்து துர்கா பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று சமூகவலைதளத்தில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த காணொளியில் சாமியார் போன்ற தோற்றமுடைய நபர் ஒருவர் சிறுமியை கொடூரமாக பிடித்து இழுக்கிறார். இதில் வலியினால் சிறுமி சத்தம் போட்டதால் அவருக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி பலமுறை சிறுமியை கடுமையாகத் தாக்கி “நீ யார்?” என்று கேட்கிறார்.
தன்னை தீயசக்தி பிடிக்கவில்லை என்று சிறுமி கூறிய பிறகும் மீண்டும் மீண்டும் சிறுமியின் தலைமுடியை பிடித்து அந்த நபர் அறைகிறார். இதில் அதிர்ச்சி தரும் சம்பவம் என்றால் இவை அனைத்தும் பலர் முன்னிலையில் நடந்தது. சிறுமிக்கு உதவுவதற்கு யாரும் முன்வரவில்லை. அதற்கு பதிலாக அடித்துக் கொண்டிருக்கும் நபருக்கு ஆதரவாக “உண்மையைக் கூறுங்கள்” என கேட்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக முழு விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
घटना मप्र के सतना जिले के रामनगर थाना अंतर्गत ग्राम 'नादो' की है, एक नाबालिग लड़की के साथ आरोपी इश्वरदीन गुप्ता द्वारा सार्वजनिक स्थल पर अंधविश्वास एवं पाखंडवाद के नाम पर लड़की के लाख मना करने के बावजूद बर्बरता पूर्ण तरीके से सभी के समक्ष मारपीट कर रहा है। 1/1@ChouhanShivraj pic.twitter.com/Vd1NGZ2UeB
— Sunil Astay 🇮🇳 (@SunilAstay) October 25, 2020