Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனரின் அடுத்த படம்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..”

திரௌபதி படத்தின் மூலமாக பிரபலமான இயக்குனர் மோகன் ஜி தனது அடுத்தப் படம் பற்றிய  அதிகாரப்பூர்வ அறிவிப்பை   வெளியிட்டிருக்கிறார்.

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த மாதம் பிப்ரவரியில் வெளியான திரைப்படம்   திரௌபதி ஆகும். இதில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படமானது நாடகக் காதல் ,ஆணவக் கொலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும்.  இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல்  வசூலிலும் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. இந்த நிலையில் இயக்குனர் மோகன்  ஜி   தான் இயக்கும் அடுத்த படத்தை பற்றிய தகவலை வெளியிட்டிருக்கிறார்.

அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட திரெளபதி இயக்குனர் || Draupathi directors next movie announcement

அதன்படி , இந்த  படத்தின் பெயர் ருத்ர தாண்டவம் ஆகும். ரிச்சர்ட் ரிஷி  தான் இந்த  படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜூபின்  இசையமைக்க இருக்கிறார்.  இந்தப் படத்தின் மற்ற நடிகை, நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகின்றது. மேலும் வருகின்ற டிசம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்கி 2021 -ஆம் வருடம் மே மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிடுகின்றனர்.

Categories

Tech |