ஃபிங்கர் ஃபிஷ் செய்ய தேவையான பொருள்கள்:
வஞ்சிர மீன் – அரை கிலோ
இஞ்சிப்பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
சோள மாவு – 3 டேபிள் ஸ்பூன்
முட்டை – 2
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
எண்ணெய் பொரிக்க – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பாத்திரத்தில் வஞ்சர மீனை சுத்தம் செய்து முள், தோல், நீக்கி அதனை விரல் அளவுக்கு வெட்டி எடுத்து கொள்ளவும்.
கழுவி வைத்த மீனுடன், இஞ்சிப்பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோள மாவு, மூட்டை, எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக புரட்டி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் மீனை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான, மொறு மொறுப்பான ஃபிங்கர் ஃபிஷ் பரிமாறலாம்.